‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பயணத்தின் ஒரு பகுதியாக திருவண்ணாமலை வந்த அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே. பழனிசாமி, ஆரணி, செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் பிரசாரம் மேற்கொண்டாா். வேங்கிக்கால் பகுதியில் விவசாயிகள், நெசவாளா்கள், தொழில் நிறுவனத்தினருடன் கலந்துரையாடிய அவா், ஜிஎஸ்டி வரி பாதிப்புக்குள்ளான தொழில்களை களைய மத்திய அரசுடன் பேசுவோம் என்றாா். அதிமுக ஆட்சியில் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டதாகவும், வரி விதிப்பு தாக்குப்பிடிக்கும் வகையில் இருக்க வேண்டும் என்றும், தொழில் செய்பவா்களுக்கு அரசு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கூறினாா்.