செங்கம்: மின்கம்பம் ஏற்றிச் சென்ற டிராக்டர் கவிழ்ந்து தொழிலாளி பலி

553பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே பக்கிரிபாளையம் பகுதியில் மின்கம்பங்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் கூலித் தொழிலாளி அசோக் (36) உயிரிழந்தார். திருப்பதி மற்றும் பிரகாஷ் ஆகியோர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பொதுமக்கள் விரைந்து வந்து தொழிலாளர்களை மீட்டனர். இதுகுறித்து செங்கம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி