திருவண்ணாமலையில் நடைபெறும் உலக சித்தா்கள் மாநாடு.

111பார்த்தது
திருவண்ணாமலையில் நடைபெறும் உலக சித்தா்கள் மாநாடு.
திருவண்ணாமலையில் நடைபெற்ற உலக சித்தர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட அர்ஜுன்சம்பத் செய்தியாளர்களிடம் பேசுகையில், அனைவருக்கும் தாய்மொழி முக்கியம் என்றும், தாய்மொழி கல்வி அறிவை வளர்க்கும் என்றும் கூறினார். தமிழகத்தில் ஆங்கில வழிக்கல்வி ஓங்கி வருவதாகவும், மழலையர் கல்வி தாய்மொழியில் போதிக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார். 2006-ல் கருணாநிதி கொண்டு வந்த கட்டாய தமிழ் பாடத்திட்டம் நடைமுறையில் இல்லை என்றும், சிறுபான்மையினருக்கு விலக்கு அளிப்பது கண்டிக்கத்தக்கது என்றும் தெரிவித்தார். அனைத்து கல்வி நிறுவனங்களிலும் தமிழை பயிற்று மொழியாகவும், நீதிமன்றத்தில் வழக்கு மொழியாகவும், அரசாணைகள் தமிழில் வெளியிடப்பட வேண்டும் என்றும், கோவில்களில் தேவாரம், திருமுறைகள் இசைக்கப்பட வேண்டும் என்றும், பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.

தொடர்புடைய செய்தி