
திருவண்ணாமலை: காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு முகாம்
திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று (18.02.2026) காவல் கண்காணிப்பாளர் சுதாகர், தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்வு சிறப்பு மனு விசாரணை முகாம் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கினர். காவல் கண்காணிப்பாளர் மனுக்களை நேரில் பெற்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டார். பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வு காண காவல்துறை நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் தெரிவித்தார்.


























