க.குறிச்சி: சரக்கு வாகனம் மோதி ஆபரேட்டர் பலி

68பார்த்தது
வானாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தவிடன், 58; உளுந்துார்பேட்டை நகராட்சியில் டேங்க் ஆபரேட்டராக பணிபுரிந்தார். இவர், வானாம்பட்டு கிராமத்தில் இருந்து சேந்தநாடு கிராமத்திற்கு சைக்கிளில் சென்றபோது, எதிரே வந்த பொலிரோ பிக் அப் சரக்கு வாகனம் மோதியது. அதில், அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். திருநாவலூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி