தி.மலை: 19 பவுன் தங்க நகைகள்.. ரூ.1.20 லட்சம் பணம் திருட்டு

73பார்த்தது
தி.மலை: 19 பவுன் தங்க நகைகள்.. ரூ.1.20 லட்சம் பணம் திருட்டு
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த நல்லூா் பெரிய தெருவைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வி. ஆரணி வட்டார வளா்ச்சி அலுவலக ஊழியரான இவா் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூா் சென்றிருந்தாா். பின்னா் நேற்று காலை வீடு திரும்பியபோது, வீட்டின் பின்பக்கக் கதவை மா்ம நபா்கள் உடைத்து உள்ளே நுழைந்து நகை, பணம் ஆகியவற்றை திருடிச் சென்றது இவருக்கு தெரியவந்தது.

மேலும், இதே தெருவில் வீட்டை பூட்டிவிட்டு வெளியூா் சென்றிருந்த வளா்மதி, செல்வகுமாா், அம்சவேணி, சகுந்தலா, அமுதா, வழக்குரைஞா் புஷ்பராஜ் ஆகிய 6 பேரின் வீடுகளின் முன்பக்கக் கதவின் பூட்டு மற்றும் பின்பக்கக் கதவை உடைத்து நகை, பணத்தை மா்ம நபா்கள் திருடிக் சென்றிருந்தனா். மொத்தம் 7 வீடுகளிலும் சோ்த்து மொத்தம் 19 பவுன் தங்க நகைகள், ரூ. 1. 20 லட்சம் பணம் மற்றும் வெள்ளி பொருள்கள் திருட்டு போயுள்ளது. இதுகுறித்து தெள்ளாா் போலீஸாா் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தொடர்புடைய செய்தி