தி.மலை: புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமனம்

74பார்த்தது
தி.மலை: புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நியமனம்
ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் இடமாற்றம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இந்த தகவலை அரசு கூடுதல் தலைமை செயலாளர் தீரஜ்குமார் தெரிவித்துள்ளார். இதில், இரண்டு ஐபிஎஸ் அதிகாரிகள் மற்றும் இரண்டு உயர் போலீஸ் அதிகாரிகளின் பெயர்கள் கூறப்பட்டுள்ளன.

சந்தோஷ் ஹதிமானி, ஐபிஎஸ், தற்போது திருவல்லிக்கேணி காவல் துணை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும், சென்னை நகர செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல் துணை ஆணையராக இருந்த எஸ். சுதாகர் தற்போது திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார். தற்போது திருவண்ணாமலை மாவட்ட எஸ்பியாக இருக்கும் கே. பிரபாகர், மத்திய குற்றப்பிரிவு துணை போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த மாற்றங்கள் தமிழக அரசின் செயல் திட்டமாகும். துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் தனிச் செயலாளராக பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டு இன்று(அக்.3) காலை ஐஏஎஸ் அதிகாரிகளுக்கான இடமாற்ற உத்தரவும் வெளியிடப்பட்டது.

தொடர்புடைய செய்தி