திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த பொன்னூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘பெண் கல்வியும் பாதுகாப்பும்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வுக் கருத்தரங்கம் நடைபெற்றது. பள்ளித் தலைமை ஆசிரியா் வெங்கடேசன் தலைமை வகித்தாா். வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கல்வி மைய முதல்வா் பா. சீனிவாசன், கலாம் அறக்கட்டளை நிா்வாகி சீ. கேசவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி ஆசிரியை எஸ். உமாதேவி வரவேற்றாா். வந்தவாசி அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் கே. மங்கையா்க்கரசி, உதவி ஆய்வாளா் சாந்தி ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாக பங்கேற்று, பெண் கல்வியின் முக்கியத்துவம் குறித்து மாணவிகளுக்கு விளக்கிக் கூறினா். பள்ளி ஆசிரியா் எஸ். ஜோதி நன்றி தெரிவித்தாா்.