திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் கிராமத்தில் உள்ள 1400 அடி உயர தவளகிரீஸ்வரர் மலையில் திடீரென காட்டுத்தீ பரவியது. 650 ஏக்கர் பரப்பளவில் உள்ள மலையில் சுமார் 5 ஏக்கருக்கும் மேல் தீ பரவியதாக கூறப்படுகிறது. காற்றின் வேகத்தால் தீ மளமளவென பரவி, சிறு உயிரினங்கள் மற்றும் அரிய மூலிகை செடிகள் எரிந்தன. 3 மணி நேரத்துக்கும் மேலாக எரிந்த தீயை வனத்துறையினரும் வந்தவாசி தீயணைப்பு வீரர்களும் போராடி அணைத்தனர். இதில் மர்மநபர்கள் தொடர்பு இருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.