திருவண்ணாமலை: பெண் கல்வியை வலியுறுத்தி மனிதச் சங்கிலி

80பார்த்தது
திருவண்ணாமலை: பெண் கல்வியை வலியுறுத்தி மனிதச் சங்கிலி
திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் பெண் கல்வியை வலியுறுத்தி பள்ளி மாணவிகள் பங்கேற்ற மனிதச் சங்கிலி நடைபெற்றது. பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்பதை வலியுறுத்தி வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்வை வட்டாட்சியர் கௌரி தொடங்கிவைத்தார். பள்ளித் தலைமை ஆசிரியை தாமரைச்செல்வி தலைமை வகித்தார். ஆசிரியை பவித்ரா வரவேற்றார். ஆரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் 500-க்கும் மேற்பட்டோர் மனிதச் சங்கிலி ஊர்வலம் சென்றனர். உடன் ஆசிரியர், ஆசிரியைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி