வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் திறப்பு

82பார்த்தது
வேளாண்மை விரிவாக்க மைய கட்டடம் திறப்பு
வந்தவாசியில் வேளாண் விரிவாக்க மைய புதிய கட்டடம் ரூ 2.65 கோடியில் அலுவலர்களுக்கான வேளாண் பொருள்கள் வைப்பதற்கான குடோன் உள்ளிட்டவைகளுடன் கட்டப்பட்டது. இந்த புதிய கட்டடத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று காலை திறந்து வைத்தார். 

அதே சமயத்தில் வந்தவாசி புதிய கட்டடத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் இயக்குநர் குமரன் வரவேற்புரை ஆற்றினார். வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் வந்தவாசியில் நிகழ்ச்சியில் பங்கேற்று உழவர் பெருமக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை அளித்து கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து மக்களுக்கு அர்ப்பணித்தார். 

நிகழ்ச்சியில் திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆரியாத்தூர் பெருமாள், கீழ்க்கொடுங்காலூர் பழனி, திருவண்ணாமலை வேளாண் துணை இயக்குனர் ராமபிரபு, மற்றும் மாவட்ட பிரதிநிதிகள் தியாகராஜன், ஜெய்சங்கர், மருதாடு ரமேஷ் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி