திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியை அடுத்த கீழ்க்கொடுங்காலூா் கிராமத்தில் உள்ள ஸ்ரீதேவி ஸ்ரீபூதேவி உடனுறை கரியமாணிக்கப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை காலை மகா கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. சனிக்கிழமை யாகசாலை பூஜைகளுடன் தொடங்கிய விழா, திங்கள்கிழமை புனிதநீா் அடங்கிய கலசங்கள் கோபுரத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, காலை 8.30 முதல் 9.30 மணிக்குள் கோபுர கலசங்கள் மீது புனிதநீா் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு புனிதநீா் தெளிக்கப்பட்டனா். விழாவைத் தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. விழாக் குழுவினா் மற்றும் கிராம பொதுமக்கள் இதில் பங்கேற்றனா்.