திருவண்ணாமலை: பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கியதில் ஒருவர் கைது

69பார்த்தது
திருவண்ணாமலை: பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரை தாக்கியதில் ஒருவர் கைது
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் தேவநாத் (30). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். இவர், கடந்த 12-ஆம் தேதி பணியில் இருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த நரசிம்மன்(25) வந்து கடனுக்கு பெட்ரோல் கேட்டாராம். அதற்கு தேவநாத் மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரமடைந்து, தொழிலாளி தேவநாத்தை நரசிம்மன் தாக்கியதாகத் தெரிகிறது. இதில் பலத்த காயமடைந்த தேவநாத் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், பெரணமல்லூர் காவல் உதவி ஆய்வாளர் கோவிந்தராஜு வழக்குப் பதிந்து, நரசிம்மனை கைது செய்து சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வந்தவாசி கிளைச் சிறையில் அடைத்தார்.

தொடர்புடைய செய்தி