வந்தவாசி அருகே எரமலூா் கிராமத்தில், ஆரணி திமுக எம்பி எம். எஸ். தரணிவேந்தன் முன்னிலையில், மருதாடு கிராமத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் பல்வேறு மாற்றுக் கட்சிகளிலிருந்து விலகி திமுகவில் இணைந்தனர். எம்பி தரணிவேந்தன் அவர்களுக்கு சால்வை அணிவித்து கட்சியில் இணைத்துக் கொண்டார். அப்போது, திமுக அரசின் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து அவர் விளக்கினார். இந்நிகழ்ச்சியில் திமுக ஒன்றியச் செயலாளர் சி. ஆர். பெருமாள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.