திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறும் அரசு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து, தமிழ்நாடு சட்டப்பேரவை உறுதிமொழிக்குழுவின் தலைவர் பண்ருட்டி தொகுதி எம்எல்ஏ வேல்முருகன் தலைமையில் நேற்று (ஜூன் 10) மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
அதில் கலெக்டர் தர்ப்பகராஜ், குழு உறுப்பினர்களான எம்எல்ஏக்கள் அரவிந்த்ரமேஷ் (சோழிங்கநல்லூர்), நல்லத்தம்பி (திருப்பத்தூர்), அருள் (சேலம் மேற்கு), மாங்குடி (காரைக்குடி), மோகன் (அண்ணாநகர்), ஜெயக்குமார் (பெருந்துறை) மற்றும் எம்எல்ஏக்கள் பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
பின்னர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மாலை குழுவின் தலைவர் வேல்முருகன் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடந்தது. அப்போது, துறைவாரியாக மேற்கொள்ளப்படும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பணிகளை குறித்த காலத்துக்குள் விரைந்து முடிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.