திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த தெள்ளார் ஒன்றியக் குழுவின் சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.
தெள்ளார் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு, அதன் தலைவர் கமலாட்சி இளங்கோவன் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மோகனசுந்தரம், எல். சீனிவாசன், துணைத் தலைவர் விஜயலட்சுமி தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆரணி எம்.பி. எம்.எஸ். தரணிவேந்தன், வந்தவாசி எம்எல்ஏ எஸ். அம்பேத்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். கூட்டத்தில், பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்த தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து, நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பணி நிறைவு பாராட்டு விழாவில், பதவிக் காலம் முடிய உள்ள ஒன்றியக்குழுத் தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் ஊராட்சி மன்றத் தலைவர்கள் உள்ளிட்டோரை எம்.எஸ். தரணிவேந்தன் எம்.பி., எஸ். அம்பேத்குமார் எம்எல்ஏ ஆகியோர் பாராட்டினர்.