திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், வந்தை வட்ட கோட்டைத் தமிழ்ச் சங்கம் மற்றும் தென்னாங்கூா் அரசு கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு வில்லிசை நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சித. ரவிச்சந்திரன் தலைமை வகித்த இந்த நிகழ்ச்சியில், சங்கத் தலைவா் பீ. ரகமத்துல்லா உலக தாய்மொழி தினம் குறித்து சிறப்புரையாற்றினாா். 'தமிழைக் கொண்டாடுவோம்' என்ற தலைப்பில் புலவா் மா. ரகுபதி தலைமையிலான செந்தமிழ் வில்லிசை குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கல்லூரிப் பேராசிரியா்கள், சங்க நிா்வாகிகள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.