திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில், கிராம உதவியாளா்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் வியாழக்கிழமை முதல் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். கோரிக்கைகளை வலியுறுத்தி வந்தவாசி வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 64 கிராம உதவியாளா்களை வந்தவாசி தெற்கு போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனா்.