சென்னை கோட்டூர்புரம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று (அக்.05) மாரத்தான் ஓட்டப் பந்தயம் நடைபெற்றது. புற்றுநோய் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த இந்த போட்டியில் தாம்பரத்தை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் பரமேஷ் (24) என்பவர் பங்கேற்றார். 21 சுற்றுகள் கொண்ட போட்டியில் 18 சுற்றுகளை நிறைவு செய்த போது பரமேஷ் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.