சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே டானிஸ் பேட்டை வனச்சரகத்தில் உள்ள ராமசாமி மலை பகுதியில், அடிக்கடி துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துறை விசாரணையில், கமல் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் பழந்தின்னும் வௌவால்களை வேட்டையாடி, சமைத்து “சில்லி சிக்கன்” என பெயரிட்டு விற்பனை செய்து வந்தது தெரியவந்துள்ளது. இதைத்தொடர்ந்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.