தமிழ்நாடு மின்வாரிய தலைமையகத்தில் டெண்டர், கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய 10க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் மாயமானதாக புகார் எழுந்துள்ளது. அமைச்சர் நிர்மல்குமார், துறையை ஆய்வு செய்த பின்பு சில நாட்களிலேயே இந்த புகாரானது கொடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை போலீசார் திருட்டு வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிசிடிவிகளை கைப்பற்றிய போலீசார் 2 சந்தேக நபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.