டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட மூல சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிப்., 24, 25 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு IV (குரூப்-4) தேர்வில் தேர்வர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை விவரங்கள் அக்டோபர் 22, 2025 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சென்னையில் உள்ள டிஎன்டிஎஸ்சி அலுவலகத்தில் இந்த 2ஆம் கட்ட சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.