நடப்பாண்டில் நடந்த TNPSC குரூப் 4 தேர்வில் காலியிடங்களின் எண்ணிக்கை 5,307 ஆக உயர்ந்துள்ளது என்ற மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. முதலில் 3,935 பணியிடங்கள் அறிவிக்கப்பட்ட நிலையில், பிறகு 727 பணியிடங்கள் சேர்க்கப்பட்டன. தற்போது கூடுதலாக அறிவிக்கப்பட்டுள்ள 645 காலிப் பணியிடங்களையும் சேர்த்து, மொத்தப் பணியிடங்களின் எண்ணிக்கை 5,307 ஆக அதிகரித்துள்ளது.