மநீம தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், நாடாளுமன்றத்தில் தமிழ் பற்று குறித்து பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இதுகுறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் இன்று (பிப்.6) கூறுகையில், “பெரியார் சொன்னதற்குதான் நாடாளுமன்றத்தில் கமல்ஹாசன் பதிலடி கொடுத்தார் என்பது தெரியாமல் பெரியார் பக்தர்கள் கை தட்டுகின்றனர். கமல்ஹாசன் உரையைப் படிக்க வேண்டுமென்றால் கோனார் உரைதான் வேண்டும்; ‘ஆ’, ‘ஊ’ என பேசினார். ஆனால் அவர் பேசியது ஒன்றும் கேட்கவில்லை” என விமர்சித்துள்ளார்.