குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை என அனைவரையும் கவர்ந்து இழுக்கும் 'பார்பி பொம்மை'க்கு இன்று பிறந்தநாள். இந்த பொம்மை மார்ச் 9, 1959 இல் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஒரு ஜெர்மன் பொம்மையால் ஈர்க்கப்பட்டு, ரூத் ஹேண்ட்லர் என்ற பெண்மணியால் இது உருவாக்கப்பட்டது. 150க்கும் மேற்பட்ட நாடுகளில் பிரபலமான பார்பி பிராண்டின் மதிப்பு ரூ.5 ஆயிரம் கோடிக்கு மேல் ஆகும். குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஒரு பொம்மையாக இன்றளவும் பார்பி பொம்மைகள் உள்ளன.