தவறான நபரை காதலிப்பதை தவிர்த்து, தனித்தே இருப்பது மேல் என்ற மனநிலையில் இன்றைய தலைமுறை இளைஞர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்காக இன்று (நவ.11) உலக முரட்டு சிங்கிள்ஸ் தினமாக கொண்டாடப்படுகிறது. 11.11 என்ற இந்த தேதி அனைத்தும் 'ஒன்று' என்ற குறியீட்டை காட்டுவதால், இத்தினம் சிங்கிள்ஸ் டே-வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சிங்கிளாக இருப்பதன் மூலம் மன அழுத்தம் குறைந்து, சுதந்திரமாக வாழ முடியும் என்பதால், பலர் இதை விருப்புகிறார்களாம்.