நெல் ஈரப்பத அளவை உயர்த்தாத மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நவம்பர் 23, 24ல் போராட்டம். தவெக தலைவர் விஜயின் பரப்புரைக்கு உயர்நீதிமன்ற வழிகாட்டுதலை பின்பற்ற காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சமூக வலைதளங்களில் இளையராஜாவின் பெயர், புகைப்படங்களை வணிக நோக்கில் பயன்படுத்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 17 ஆண்டுகளுக்குப் பின்னர் சென்னையில் டபுள் டக்கர் பேருந்து சேவை மீண்டும் தொடங்க உள்ளது. ஆஷஸ் டெஸ்ட்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார் ஸ்டார்க்.