தமிழகத்தில் இன்று ஆகஸ்ட் 1ஆம் தேதி சனிக்கிழமை அன்று சில துணை மின் நிலையங்களில் மின்வாரிய பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கோவை, சென்னை, தர்மபுரி, கரூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 4 மணி வரையும் மின்சாரம் துண்டிக்கப்படும். பொதுமக்கள் முன்கூட்டியே தேவையான ஏற்பாடுகளை செய்துகொள்ள அறிவுறுத்தப்படுகிறது.