பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று ஆகஸ்ட் 5 தமிழகத்தின் சில மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாகப்பட்டினம், கோயம்புத்தூர், புதுக்கோட்டை, அரியலூர், கடலூர், கரூர், சென்னை மாவட்டங்களில் குறிப்பிட்ட சில துணை மின் நிலையங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சாரம் இருக்காது. இதனால் காலை 9 மணிக்குள் மின்சாரம் சார்ந்த பணிகளை முடித்துக் கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.