மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் இன்று (நவ., 22) சென்னையின் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படவுள்ளது. அதன்படி, சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரி சாலை, நெடுஞ்சாலை, மூர்ஸ் சாலை, கே.என்.கே சாலை, வாலஸ் கார்டன் 1 முதல் 3-வது தெரு, ரட்லேண்ட் கேட் 1 முதல் 6-வது தெரு, சுப்பாராவ் அவென்யூ 1 முதல் 3-வது தெரு, ஆண்டர்சன் சாலை, ஹாடோஸ் சாலை 1, 2-வது தெரு, பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.