மலையாள திரையுலகின் முன்னணி நட்சத்திரமான துல்கர் சல்மான், தற்போது தெலுங்கு சினிமாவில் நேரடியாக கதாநாயகனாக களமிறங்கி அதிரடி காட்டி வருகிறார். ஏற்கனவே 'மகாநடி' மற்றும் 'சீதா ராமம்' போன்ற படங்கள் மூலம் தெலுங்கு ரசிகர்களின் மனதை வென்ற அவர், தற்போது பவன் சாடினேனி இயக்கத்தில் 'ஆகாசம்லோ ஒக்க தாரா' என்ற நேரடி தெலுங்கு திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், அடுத்தடுத்து பான்-இந்தியா படங்களில் நடித்து முன்னணி நடிகர்களுக்கு துல்கர் சவால் விடுத்தது வருகிறார்.