இன்றைய முக்கிய செய்திகள்

16பார்த்தது
காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒரே இடத்தில் நீடித்து வருவதால், சென்னையில் பல இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டில் 'டிட்வா' புயல் தாக்கத்தால் இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் தவெக தலைவர் விஜய் ரோடு ஷோ நடத்த முடியாது என்றும், வேண்டுமென்றால் பொதுக்கூட்டம் நடத்தலாம் என்றும் சபாநாயகர் தெரிவித்துள்ளார். திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு இன்று திருவண்ணாமலையில் இசையமைப்பாளர் இளையராஜா சாமி தரிசனம் செய்தார். தங்கம் விலை சவரனுக்கு ரூபாய் 240 குறைந்து, ரூபாய் 96,320க்கு விற்பனையாகிறது.