போனஸ் வழங்காததால் சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: மத்திய அரசுக்கு பல லட்சம் இழப்பு

6440பார்த்தது
போனஸ் வழங்காததால் சுங்கச்சாவடி ஊழியர்கள் போராட்டம்: மத்திய அரசுக்கு பல லட்சம் இழப்பு
அரியானா மாநிலம் பதேஹாபாத் சுங்கச்சாவடியில் பணியாற்றும் ஊழியர்களுக்கு போதிய தீபாவளி போனஸ் வழங்கப்படாததால் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரூ.1,100 மட்டுமே போனஸ் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால், கடந்த ஞாயிற்றுக்கிழமை (19-ம் தேதி) இரவு முதல் காலை வரை கேட்டை மூடாமல் திறந்து விட்டதால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் கட்டணம் செலுத்தாமல் சென்றன. இதனால் மத்திய அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.