சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் - ஜவாஹில்லா

24பார்த்தது
சுங்கச்சாவடி கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் - ஜவாஹில்லா
சுங்கச்சாவடி கட்டண உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என மமக தலைவர் ஜவாஹில்லா வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கையில், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வால் மக்கள் ஏற்கனவே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் காலாவதியான சுங்கச்சாவடிகள், 60 கிமீ தூரத்திற்கும் குறைவான இடைவெளியில் உள்ள சுங்கச்சாவடிகள், நகர்ப்புற சுங்கச்சாவடிகளை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு காலதாமதம் இன்றி எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி