திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் உள்ள காந்தி காய்கறி மார்க்கெட்டில் தொடர்ச்சியான மழை காரணமாக தக்காளி வரத்து குறைந்துள்ளது. இதன் எதிரொலியாக தக்காளி விலை திடீரென உயர்ந்து, ஒரு பெட்டி ரூ.450 வரை விற்பனை செய்யப்படுகிறது. மழையால் அறுவடை மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் சந்தைக்கு வரத்து குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால் சில்லறை சந்தைகளிலும் தக்காளி விலை அதிகரித்து, பொதுமக்கள் மற்றும் ஹோட்டல் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.