மகாவீர் ஜெயந்தி நாளை (மார்ச் 31) நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, தமிழக அரசு சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான கடைகள், மதுபானக் கூடங்கள் மூடப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை மீறி செயல்படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று இன்னும் டாஸ்மாக் கடை மூட 2 அரை மணி நேரமே உள்ளதால், மதுப்பிரியர்கள் அதிகளவில் படையெடுத்து வருகின்றனர். விற்பனையும் மும்முரமாக நடந்து வருகிறது.