“மைனர் பெண்ணின் ஆடையை அவிழ்ப்பதும், அந்தரங்க இடங்களில் தொடுவதும் பாலியல் வன்கொடுமை குற்றம்” என உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. கடந்தாண்டு, 11 வயது சிறுமியின் மார்பகத்தை தொட்டு, அவரது பைஜாமாவை அவிழ்த்த குற்றச்சாட்டுகள் பாலியல் வன்கொடுமை செய்வதற்கான முயற்சி அல்ல என்று அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதன் மேல்முறையீட்டு வழக்கு விசாரணையில் அலகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.