மகாராஷ்டிராவில் ஜிப்லைன் சவாரியின்போது ஏற்பட்ட கோளாறு காரணமாக, சுற்றுலாப் பயணி ஒருவர் 3,500 அடி ஆழமான பள்ளத்தாக்கின் மேல் அந்தரத்தில் சிக்கிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. தகவல் அறிந்த ஜிப்லைன் பணியாளர்கள் விரைந்து செயல்பட்டு, பாதுகாப்பு உபகரணங்களின் உதவியுடன் சுற்றுலாப் பயணியை பத்திரமாக மீட்டனர். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்றுள்ளது.