மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில், தோட்டக்கலைத்துறை சார்பில் 63-வது மலர் கண்காட்சி தற்பொழுது கோடை விடுமுறையை முன்னிட்டு மிக விமரிசையாக நடைபெற்று வருகிறது. சால்வியா, டெல்பினியம், ஆஸ்டர், டேலியா மற்றும் பல வண்ண ரோஜாக்கள் என ஆயிரக்கணக்கான மலர்கள் பூத்துக் குலுங்கும் இந்த விழாவை காண தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வருகை தந்துள்ளனர்.