சீனாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள யுனான் மாகாணத்தின் ஹொங்ஹே பட்டாம்பூச்சி பள்ளத்தாக்கில் ஆண்டுதோறும் நிகழும் அதிசய நிகழ்வாக, தற்போது லட்சக்கணக்கான வண்ணத்து பூச்சிகள் கூட்டுப்புழு பருவத்திலிருந்து வெளிவந்து காடுகளை அலங்கரித்து வருகின்றன. இந்த ஆண்டு இந்த பட்டாம்பூச்சிகளின் வரத்து கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக அதிக எண்ணிக்கையை எட்டும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர். இந்த காட்சியை கண்டு ரசிக்க உலகெங்கிலும் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் அங்கு குவிந்து வருகின்றனர்.