நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் 66-வது பழக் கண்காட்சி நேற்று கோலாகலமாகத் தொடங்கியது. இக்கண்காட்சியில் பல்வேறு வகையான பழங்களைக் கொண்டு தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள விலங்குகளின் உருவங்கள் மற்றும் கலைப்படைப்புகள் பார்வையாளர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளன. இதனைக் கண்டு ரசித்த உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் மிகுந்த உற்சாகத்துடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர்.