மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் நிலவும் இதமான சூழலை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகள், தங்களின் பாதுகாப்பை மறந்து ஓடும் வாகனங்களின் மேற்கூரையில் அமர்ந்து பயணிப்பது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. வளைவுகள் மற்றும் சரிவுகள் நிறைந்த மலைப்பாதையில் இத்தகைய விதிமீறல்கள் பெரும் விபத்துகளுக்கு வழிவகுக்கும் என்பதால், காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.