நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'டாக்சிக்' படத்தின் தெலுங்கு விநியோக உரிமையை ரூ.120 கோடிக்கு வாங்கியது குறித்து எழுந்த விமர்சனங்களுக்கு தயாரிப்பாளர் தில் ராஜு பதிலடி கொடுத்துள்ளார். இந்த தொகை மிக அதிகம் என்றும், விளம்பரத்திற்காக பொய் சொல்லப்படுவதாகவும் இணையத்தில் பரவிய கிண்டல்களுக்கு, "பண பரிமாற்றம் முடிந்ததும் வங்கி ஆதாரங்களை காட்ட தயார்" என அவர் சவால் விடுத்துள்ளார்.