டொயோட்டா நிறுவனம் புதிய அர்பன் க்ரூஸர் எபெல்லா இவி எலெக்ட்ரிக் காரை பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் அதன் முதல் எலெக்ட்ரிக் காராக அறிமுகம் செய்துள்ளது. ரூ.23.60 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், எபெல்லாவில் பாதுகாப்பு அம்சங்களாக லெவல்-2 ADAS வழங்கப்பட்டு இருப்பது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மேலும், 360-டிகிரி கேமரா மற்றும் 7 ஏர்பேக்குகள் போன்ற பாதுகாப்பு அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.