பள்ளிப் பேருந்து மீது மோதிய டிராக்டர்.. 2 பேர் பலி

11672பார்த்தது
பள்ளிப் பேருந்து மீது மோதிய டிராக்டர்.. 2 பேர் பலி
தெலங்கானா மாநிலத்தில், தனியார் பள்ளிப் பேருந்து மீது டிராக்டர் மோதிய கொடூர விபத்தில், 2 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயமடைந்துள்ளனர். 40 மாணவர்களுடன் சென்ற பள்ளிப் பேருந்து மீது, அவ்வழியாக வேகமாக சென்ற டிராக்டர் ஒன்று மோதியுள்ளது. டிராக்டர் ஓட்டுநர் போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த விபத்தில், பள்ளி மாணவர்களுக்கு லேசான காயம் ஏற்பட்ட நிலையில், டிராக்டரில் பயணித்த 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 12 பேருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்தி