விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் அருகே அரசுப்பேருந்தும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இன்று காலை (மே 17) நடந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் இருசக்கர வாகனம் அப்பளமாக நொறுங்கியது.