காஞ்சிபுரம்: குன்றத்தூரைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் வெங்கடேசன் (16), பள்ளிக்கு வந்தபோது வகுப்பறையில் கடந்த திங்கள்கிழமை மயங்கி விழுந்தார். விடுமுறை முடிந்து பள்ளிக்கு வந்த அவர் திடீரென மயக்கமடைந்த நிலையில், ஆசிரியர்கள் அவரை தனியார் மருத்துவமனைக்கும் பின்னர் சென்னை அரசு மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.