பழ வியாபாரம் செய்து வந்த மூதாட்டிக்கு நேர்ந்த துயர சம்பவம்

திருப்பத்தூர் அருகே பழ வியாபாரம் செய்து வந்த மூதாட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோணாப்பட்டு அருகே கடந்த 20 ஆண்டுகளாக முதாட்டி சந்திரா (68) என்பவர் பழ வியாபாரம் செய்து வந்துள்ளார். இந்த நிலையில், அவரை மர்ம கும்பல் வெட்டிக் கொலை செய்துள்ளது. இதற்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
