காரில் சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்

25பார்த்தது
காரில் சென்ற கல்லூரி மாணவிக்கு நேர்ந்த சோகம்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே நடந்த சாலை விபத்து ஒன்றில், நர்சிங் கல்லூரி மாணவி புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். புவனேஸ்வரியை அவரது ஆண் நண்பரான நந்தகுமார் காரில் கல்லூரியில் இறக்கிவிடுவதற்காக வேகமாக அழைத்து சென்றபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கட்டுப்பாட்டை இழந்த கார் தலைக்குப்புற கவிழ்ந்ததில், புவனேஸ்வரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இருப்பினும், கார் ஓட்டிய நந்தகுமார் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.
Job Suitcase

Jobs near you