உத்தரப் பிரதேசத்தில் நாய் கடித்த 4 மாதங்களுக்கு பிறகு, முழுமையாக தடுப்பூசி போடாத சிறுவன் ஒருவன் நாயை போல் குரைக்கும் விசித்திர நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். 2 டோஸ் தடுப்பூசி மட்டுமே போடப்பட்ட நிலையில், ரேபிஸ் பாதிப்பு நரம்பு மண்டலத்தை சிதைத்துள்ளதால் சிறுவன் உயிர் பிழைப்பது கடினம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நாய் கடித்தால் உரிய கால இடைவெளியில் முழுமையான தடுப்பூசிகளை செலுத்திக்கொள்வதன் அவசியத்தை இச்சம்பவம் வலியுறுத்துகிறது.